ஆரியங்காவிலிருந்து இருந்து நெல்லைக்கும், அம்பநாடு எஸ்டேட்டிலிருந்து தென்காசிக்கும் புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டுமென கேரள மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், முதல்கட்டமாக ஆரியங்காவு திருநெல்வேலிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கவிழா ஆரியங்காவில் நடைபெற்றது.
புனலூர் எம்எல்ஏ சுபால் முன்னிலை வகித்தார். கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமார், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கொடியசைத்து பேருந்து சேவையை
அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழக மக்களும், கேரளா மக்களும் எப்போதுமே சகோதரர்களாக இணைந்து செயல்படுபவர்கள். திருநெல்வேலி – ஆரியங்காவு இடையே தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து சேவையானது கேரள போக்குவரத்து துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுற்றுலாத் தலமான பாலருவி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
Leave a Reply