Advertisement

தென்காசி ஆட்டோ டிரைவரின் நேர்மை

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள்

தென்காசி மாவட்டம், இன்று 28.01.2025 ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பேங்க் அருகே ரப்பர் பென்டால் சுருட்டி வைக்கப்பட்ட பணம் சாலையின் ஓரம் இருப்பதை கவனித்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் திரு. செந்தில் முருகன் என்பவர் பணத்தை எடுத்து கண்ணியத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சிறிது நேரம் கழித்து பணத்தை தவறவிட்ட பரும்பு ஊரைச் சேர்ந்த ஈஸ்வர வேல் என்பவர் தனது பணத்தை ஸ்டேட் பேங்க் அருகே தொலைத்துவிட்டதாகவும் தயவு கூர்ந்து கண்டுபிடித்து தரும்படியும் ஆழ்வார்குறிச்சி காவல் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார், இது குறித்து சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சாலையின் தவறவிட்ட 5,600 ரூபாய் பணத்தை ஈஸ்வர வேலிடம் தகுந்த அறிவுரைகள் கூறி ஒப்படைக்கப்பட்டது.


சாலையில் கிடந்த பணத்தை உரிய முறையில் கண்ணியத்துடன் ஒப்படைத்த ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த சைலப்பன் என்பவரின் மகனான ஆட்டோ ஓட்டுநர் திரு. செந்தில் முருகன் என்பவரை சார்பு ஆய்வாளர் அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். ஆட்டோ ஓட்டுனர் செந்தில்முருகனின் இச்செயல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *