பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார்.
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதன்படி அறங்காவலர்களாக கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருணாசலம், பண்பொழி இசக்கி, வடகரைகீழ்பிடாகை பாப்பா, சாம்பவர்வடகரை சுமதி, அழகப்பபுரம் கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் பதவியேற்றனர்.
தொடர்ந்து அறங்காவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. கோயில் உதவி ஆணையர் கோமதி, ஆய்வாளர் சேதுராம் ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் கிருஷ்ணாபுரம் அருணாசலம் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் அருணாசலத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்
Leave a Reply