Advertisement

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு முன்பதிவு அட்டவணை வெளியீடு

ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விவரத்தை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகாலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்படும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.

இதுதொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ரிசர்வேஷன் சார்ட் வெளியிடப்பட்ட பிறகு குறிப்பிட்ட ரயில்களில் இடம் இருக்கும்பட்சத்தில் பயணிகள் Current Booking முறையில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *