கடையநல்லூர் அருகே ஆடி அமாவாசையை ஒட்டி கருப்பாநதி கரையோரம் பெரியநாயகம் கோயில் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில்
ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
பொதுவாக அமாவாசை நாள் முன்னோர்களின் ஆசிகளை பெற்று, பலவிதமான துன்பங்கள், தோஷங்கள், சாபங்களில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களின் ஆசிகளையும், பெரும் புண்ணியங்களையும் நம்முடைய சந்ததிகளுக்கு பெற்றுத் தரும் உன்னதமான நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு நேரடியாக வருவதாக ஐதீகம். ஆடி அமாவாசையில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி, தானம் ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாகவும் மக்களிடம் நம்பிக்கை உள்ளது. அதனால் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே போல் ஆடி அமாவாசை அன்று தானம் கொடுப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும். இதனால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைத்து வழிபடுபதும் வழக்கமாக உள்ளது.
கருப்பாநதியில் கட்டுக்கடங்காத கூட்டம்..
ஆடி அமாவாசையை ஒட்டி
சொக்கம்பட்டி அருகே உள்ள கருப்பாநதி பெரியநாயகம் கோயில் அருகே செல்லும் ஆற்றுப்பகுதியில் தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதில் பெரும்பாலானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகை தந்ததால் செல்லும் சாலையில் வாகன நெருக்கடி ஏற்பட்டது இதனால் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்துகின்றன.
இருப்பினும் ஆற்றில் நீரோட்டம் சரியான அளவில் இருந்ததால் மகிழ்ச்சியுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். அவர் பின்னர் பெரியசாமி அய்யனார் கோவிலில் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை பெரியநாயகம் கோயில் பகுதியில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்















Leave a Reply