கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; 2 பேர் பலி- 2 பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடியில் செங்கோட்டையை நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்ற பொழுது நேருக்கு நேர் மோதிக் கொண்டனர் .
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த செங்கோட்டையை காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (27 ) பைக்கை ஓட்டி வந்துள்ளார் இவர் சிற்பக் கலை தொழிலாளி, இவருக்கு பின்னால் இதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சுதர்சன்(25) மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்துள்ளார் இருவரும் தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வால்போஸ்டர்களை சுரண்டையிலிருந்து வாங்கிக் கொண்டு செங்கோட்டையை நோக்கி சென்ற பொழுது ஆய்க்குடி பேருந்து நிறுத்தம் அருகே வந்த பொழுது அரசு பஸ்ஸை முந்தி சென்றுள்ளார் அப்பொழுது
ஆய்க்குடி மண்டகப்படி தெரு சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்குமார் வயது 35 பைக்கை ஓட்டி வந்தார் அவருக்கு பின்னால் பைக்கில்
பிச்சாண்டி மகன் ராமையா வயசு 60 என்பவர் சீட்டில் பின்னால் பைக்கில் இருந்துள்ளார் அப்பொழுது திடீரென இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில்
எதிர்பாராத விதமாக இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பைக்கில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர் இதில் பைக் ஓட்டி வந்த செங்கோட்டையைச் சேர்ந்த சுரேஷும் ஆய்க்குடி நோக்கி வந்த பைக்கில் பின்னாடி இருந்த ராமையா 60 என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
உயிரிழந்த சுரேஷுக்கு பின்னாடி இருந்த வந்த சுதர்சனனும் ஆய்க்குடி நோக்கி பைக்கில் ஒட்டி வந்த முத்துக்குமாரும் படுகாயம் அடைந்தனர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்க்குடி போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆய்க்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உயிரிழந்த ராமையா, சுரேஷ் ஆகியோரின் உடலில் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply