கடையநல்லூர் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மங்களாபுரம் அருகே மஸ்தான் பள்ளிவாசல் முன்பு காரும் பொலிரோ ஜீபும் நேருக்கு நேர் மோதியதில் புதுமண தம்பதியினர் உட்பட9பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே கார்,ஜீப் மோதல் :புதுமண தம்பதி உள்பட 9 பேர் காயம்
கடையநல்லூர்,ஜூலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஜீப்பும், காரும் மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் தாமஸ் (74), பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய பேரன் அபிலேஷ்மார்ட்டின்(29), கோவிலூர் பகுதியைச் சேர்ந்த நிவேதாவிற்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான அபிலேஷ்மார்ட்டின்(29), நிவேதா(23) மற்றும் பிடிகடை உரிமையாளர் தாமஸ் (74), சலோமியா (70) ,ஜோஸ்பின் (40) ஆகியோர் காரில் கோவிலூருக்கு நேற்று மாலை மறு வீடு சென்று விட்டு மீண்டும் வல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கிஷோர் (25) ஓட்டியுள்ளார்.
கார் தென்காசி, மதுரை சாலையில் மங்களாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் மோதியதாம்.
இதில், ஜீப்பில் பயணம் செய்த
மங்களாபுரம் பிரவின்(25)
,குமார் (26),
ஜீப் ஓட்டுநர் மாரிச்செல்வம் (35) மற்றும் காரில் வந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply