கடையநல்லூர் அருகே அரசு பேருந்து, கார் ,பைக் அடுத்தடுத்து மோதியதில் 20 க்கு மேற்பட்டோர் படுகாயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து சிங்கிலி பட்டி அருகே திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து சென்றது பஸ்ஸை செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாரி 55 என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அப்பொழுது மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிங்கிலி பட்டி பாலம் அருகே பஸ் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியது இதில் காரின் மீது பஸ் மோதாமல் இருக்க அரசு பேருந்து அருகிலுள்ள புளியமரத்தின் மீது மோதி நின்றது.

அப்போது பஸ்ஸில் 45 பயணிகள் பயணம் செய்துள்ளனர் இதில் பஸ்ஸில் இருந்த 23 பயன்களும் எதிரே பைக்கில் வந்த ஒருவரும் என 25 நபர்கள் படுகாயம் அடைந்தனர் இதில் பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கை தலை குறுக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது இவர்கள் அனைவரையும் சொக்கம்பட்டி போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிறிய அளவில் காயம் அடைந்தவர்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து
சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவி இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தார்.

புளியங்குடி அரசு மருத்துவமனையில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லாததுதான் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
Leave a Reply