தமிழக முதல்வரை கண்டித்து கடையநல்லூரில் 3 பாஜக கவுன்சிலர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும், இன்று காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று, தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்யும் கர்நாடக மற்றும் கேரள மாநில தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்குவதை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் ஆலோசனை பேரில் .
கடையநல்லூரில் 3 பாஜக கவுன்சிலர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடக அரசு காவிரி நீரை வழங்குவதிலும் கேரளா அரசு முல்லைப் பெரியாறு துரோகம் செய்வதையும் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் இருந்து கொட்டுவதையும் தடுக்க தவறிய வஞ்சனை செய்யும் கேரளா கர்நாடகா முதல்வர்களை சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து கடையநல்லூர் பாஜக கவுன்சிலர்கள் ரேவதி பாலிஸ்வரன், சங்கரநாராயணன், மகேஸ்வரி முருகன் ஆகியோர் குமந்தாபுரத்தில் கூட்டாக ரேவதி பாலீஸ்வரன் இல்லத்தின் வாசலில் நின்று கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர் .
Leave a Reply