தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடையும் நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து தென்காசிக்கு செல்லும் தனியார் பேருந்தும், கடையத்தில் இருந்து அகஸ்தியர்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்தும் கடையம் அருகே உள்ள தினசரி சந்தை வளைவு பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களை அவசர ஊர்தி மூலம் மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் போதுமான அவசர உறுதி வர தாமதமானதால் கடையம் ஆய்வாளர் மேரி ஜெனிதா அவர்கள் தன் காவல் வாகனத்திலும் மற்றும் அட்பகுதியில் உள்ள ஆட்டோக்கள் மூலமாகவும் காயம் பட்டவர்களை மீட்டு உடனடியாக கடையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அனைவரும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து கடையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.















Leave a Reply