Advertisement

தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி

டெம்சியா மற்றும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் சார்பில்

தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி:
ஜூலை 19, 20 தேதிகளில் இசக்கி மஹாலில் நடக்கிறது

தென்காசி மாவட்ட குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் (டெம்சியா) மற்றும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தென்காசி இசக்கி மஹாலில் வருகிற 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. 20க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று தங்களது தொழில் அனுபவங்கள், வெற்றி ரகசியங்களைப் பகிர உள்ளனர்.

இந்தக் கண்காட்சியின் தொடக்க விழா 19ம்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. டெம்சியா தலைவர் திரு.சி.அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் திரு.ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். திரு. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., டெம்சியா நிறுவனர் ஆதரவாளர் திரு.எம்.ஆர்.அழகுராஜா, ஆலோசகர் திரு.எஸ்.ராமன், துணைத்தலைவர்கள் திரு.எஸ்.டி.முருகேசன், திரு.ஏ.வெங்கடேஷ்ராஜா, வாய்ஸ் ஆப் தென்காசி தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.கே.காருண்யா குணவதி, பிரிவு தலைவர்கள் திரு.டாக்டர் எஸ்.சங்கிலி விக்ரம்குமார், திரு.ஆர்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

நிழ்ச்சியில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு.சி.கே.குமரவேல், யெல்டி சாஃப்ட்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் திரு.ரா.அர்ஜுனமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். முதன்மை விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பத்மஶ்ரீ திரு.ஶ்ரீதர் வேம்பு அவர்கள் கலந்து கொண்டு விழாப்பேருரையாற்றுகிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. S.சுரேஷ் பாபு – இணை இயக்குநர்– MSME, திரு. C.K.மோகன், தலைவர் – TANSTIA, திருமதி. B. மாரியம்மாள் – பொது மேலாளர், DIC, தென்காசி, திரு. பிரபாகர் பிரவீன் குமார் – பொதுமேலாளர் – SIDBI, திருமதி. A. கஸ்தூரி – பொதுமேலாளர்– TIIC, திருநெல்வேலி, திரு. M. சக்திவேல் – மண்டலத் தலைவர் – TMB, திரு. D. பாஸ்கரன் – மூத்த மணடலத் மேலாளர் – IOB, திரு. P.N. ரகுநாத ராஜா – துணைத்தலைவர் – TANSTIA, திரு. P. கணேசன் – மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், திரு. G. சிமியோன் – உதவி இயக்குனர் MSME DFO, திரு. செந்தில் குமரன் – உதவி இயக்குனர் Spices Board, திரு. ஜெய குமார் – உதவி இயக்குனர் FIEO ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். திரு. செந்தில்கணேஷ், செயலாளர் TEMSEA நன்றியுரையாற்றுகிறார்.

இந்த கண்காட்சியின்போது தொழில் முனைவோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறு தொழில் புரிவோர், வெற்றிபெற்ற தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து கலந்தாலோசிக்கும் வாய்ப்பினைப் பெறலாம். மேலும் வணிகச் சிக்கலுக்கான தீர்வு, நேரடி ஆலோசனை, கலந்தாய்வுகள், புதுமைத்தொழில்கள், கிராமப்புற புத்தொழில்கள், தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசவுள்ளனர். தென்காசி மாவட்ட தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் 2 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று, டெம்சியா தலைவர் திரு. சி.அன்பழகன், வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் திரு.ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *