கடையநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர் திடீர் என தீப்பிடித்து எரிந்தது
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் குடியிருக்கும் அப்துல் குத்தூஸ் இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரிக் இ பைக் ஒன்றை வாங்கி இருந்தார் அதனை தினசரி ஐந்து கிலோமீட்டர் தூரம் பயன்படுத்துவது வழக்கம் இரவு தனது வீட்டு வாசல் முன்பு மின்சார இ ஸ்கூட்டர் நிறுத்தி வைத்திருந்தார்.
அப்பொழுது திடீரென்று அவரது மின்சார ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இதனைக் கண்டனர் உடனே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் மண் இவைகளைக் கொண்டு
தீயை அனைத்தனர். அருகில் உள்ளவர்கள் துரிதமாக செயல்பட்டதால் ஸ்கூட்டரில் பற்றிய தீ வேறு எங்கும் பரவாமல் தடுத்து நிறுத்தினர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வருகை தந்து இந்த இ பைக் அவர்களின் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.
Leave a Reply