கடையநல்லூர் அருகே வடகரை அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை மற்றும் வன விலங்குகளால் தொடர்ந்து விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்ற நிலையில் இந்த ஆண்டு அடவிநயினார் அணை நிரம்பாததால் நெற்பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் பொதுப்பணித்துறை சார்பில் இரவு பகலாக முறை வைத்து நீர் பாசனம் செய்து வருகின்றனர்.
இதில் பகல் ஒரு பகுதிக்கும் இரவில் வேறொரு பகுதிக்கும் அணையிலிருந்து நீரை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் விவசாயிகள் இரவு பகல் என மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய பணிகளை பார்வையிட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் தன்னுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற முஹம்மது என்ற முதியவரை யானை துரத்தியுள்ளது அப்பொழுது அவர் காட்டுயானை இடமிருந்து தப்பிக்க வயல் வரப்பில் ஓடிவந்த பொழுது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இரவு இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிற்களுக்குள் சென்று நெற் பயிர்களை மிதித்து சேதம் விளைவித்து சென்றது
இது குறித்து விவசாயி ஜாகிர் உசேன் கூறியதாவது தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறை அமைச்சருக்கும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இப்பகுதிகளை சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானையை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் செயல்படுவதாக குற்றச்சாட்டினார்.
விவசாய பொருள்களுக்கும் முறையான விலையும் இல்லை விவசாயத்தை வன விலங்குகளும் அழித்து நாசமாக்குகிறது அரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை என அரசின் மீது குற்றம் சாட்டினார்
Leave a Reply