Advertisement

சுரண்டையில் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெட்டைகுளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மகள் மானஷா 9 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்று பள்ளியில் வைத்து மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அவரை வாகனத்தில் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சைக்கான உரிய வசதி இல்லாததால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக தென்காசி கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சுரண்டையில் சுமார் 70 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை இல்லாததால் ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற அவதிப்படுவதுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை இல்லாமல் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஆகவே உடனடியாக சுரண்டையில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *