கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் கைதான நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடந்த மாதம் மதுரை – தென்காசி தேசிய சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது கடையநல்லூர் குமந்தாபுரம் அருகே- சுந்தரேசபுரம் செல்லும் சாலையில் சந்தேகக்கின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து கடையநல்லூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து இதற்கு மூளையாக செயல்பட்ட சென்னை ஆதம்பாக்கத்தை
ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவை சேர்ந்த ராஜா மகன் தீபக் (24),
என்பவரை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கஞ்சா வழக்கில் கைது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசிமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார் அதன்படி தீபக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தீபக்கை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அதற்கான சான்றிதழை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தீபக் இடம் கடையநல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழங்கினர்.
Leave a Reply