Advertisement

கடையநல்லூரில் மனைவியை கொன்ற கணவன் – கோர்ட்டில் சரண்

கடையநல்லூரில் குடும்ப தகராறில் துப்பட்டா வால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கணவர் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்வினை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (30), இவர்களுக்கு  ஜு (10). பூரணசெல்வி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 11-ந்தேதி செல்வி திடீரென்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வி இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு தடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. இதற்கிடையே, செல்வி யின் சாவில் மாமம் இருப்பு தாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், போலீஸ் கட் டுப்பாட்டு அறை எண் 100. தொடர்புகொண்டுதெரி வித்தார்

உடனே கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வி யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

செல்வி இறந்தவுடன் முருகன் திடீரென்று மாயமானார் அவர் தேற்று தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தார் அவர் குடும்ப தகராறில் மனைவி செல்வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும். இதில் அவர் இறந்ததாகவும் கூறி அதிர்ச்சி தகவலை தெரி வித்தார். இதையடுத்து முருகனை நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

முருகனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடையநல்லூரில் குடும்ப தகராறில் மனை வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கணவர் கொடூரமாக கொலை செய்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *