Advertisement

தென்காசியில் நாளை (ஜூலை 18) வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 18.07.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள்

www.tnprivatejobs.tn.gov.in

என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ 9597495097 அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யவேண்டிய லின்ங் :

www.tnprivatejobs.tn.gov.in

#Jobfair #TenkasiJob #TenkasiJobfair

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *