கடையநல்லூரில் ரமலான் புனித இரவு தொழுகை ஏராளமானோர் பங்கேற்பு
கடந்த 1ஆம் தேதி இரவு பிறை தெரிந்ததை தொடர்ந்து 2-ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை 5 மணி முதல் மாலை 6:30 மணி வரை உண்ணாமல் பருகாமல் இறைவனால் தடை செய்யப்பட்ட எந்த ஒரு காரியங்களிலும் ஈடுபடாமல் இஸ்லாமியர்கள் ஐந்து நேரம் தொழுகையில் ஈடுபட்டு இறைவனுக்காக நோன்பை கடைபிடித்து வருகின்றனர்
தொடர்ச்சியாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கடைசி பத்து நாட்களில் ஒரு நாள் புனித இரவாக இருக்கும் என்பதற்காக கடைசி 10 நாட்கள் நெல்லை, தென்காசி மாவட்ட முழுவதும் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என இரவு முழுவதும் விடிய விடிய பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகையில் ஈடுபட்டனர் .
நேற்று 27வது இரவு லைலத்துல் கதிர் புனித இரவு என்பதால்
கடையநல்லூர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இரவு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இரவுத் தொழுகையில் பங்கேற்றனர்.
Leave a Reply