தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தெற்குமேடு, புளியறை, கற்குடி கண்ணுபுளிமெட்டு பண்பொழி வடகரை சொக்கம்பட்டி வரை உள்ளிட்ட மலை அடிவார பகுதிகளில் நெல், வாழை, தென்னை மா, பலா உள்ளிட்ட பயிர்கள் பயிரடப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு தென்னை மா பலா வாழை உள்ளிட்ட மரங்களை வேரோடு சாய்த்து விடுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த விலங்குகளை வனத்துறை முழுமையாக விரட்டியடிக்கப்படாமல் பெயரளவில் பணிசெய்து வருவதாக பொதுமக்கள் உயிருக்கும், உடைக்கும் அச்சுறுத்தாலக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா செங்கோட்டை வனச்சரக அலுவலகம் வருகை தந்து வனச்சரக அலுவலரிடம் கோரிக்கை வைக்க இருந்த நிலையில் அவர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கிருந்து மாவட்ட வன அலுவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய தொகுதியான கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்குமேடு, புளியறை, கற்குடி கண்ணுபுளிமெட்டு வடகரை சொக்கம்பட்டி வரை காட்டு யானை அட்டகாசம் தொடர்ந்து வருகிறது இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்
Leave a Reply