கடும் கோடை எதிரொலி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகர்மன்ற தலைவர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்றத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடையநல்லூர் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 33 வார்டுகள் உள்ள இந்த நகராட்சியில் தாமிரவருணி குடிநீர் திட்டம், கருப்பாநதி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் கிணறுகள் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கோடை காலம் தொடங்கிய பின்னர் கருப்பாநதி மற்றும் உள்ளூர் கிணறுகளில் குடிநீர் ஆதாரம் குறைந்து வருகிறது. மழை பொய்த்ததின் காரணமாக தாமிரவருணியில் இருந்து கிடைக்க வேண்டிய குடிநீரும் போதிய அளவில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மாற்று ஏற்பாடுகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் கூறியது;
கோடை வெயில் மற்றும் மழையின்மை காரணமாக குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. இருப்பினும் நகராட்சி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
Leave a Reply