பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயில் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பிற்பகல் குமரனுக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

மாலையில் முதல் முறையாக மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ லோப மாதா அகஸ்தியர் சபை தர்ம ஸ்தாபன அறக்கட்டளை மூலம் மகா தீபம் உருவாக்கப்பட்டு மலை உச்சிக்கு கொண செல்லப்பட்டது.
பின்னர் திருக்கோயில் உதவி ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் ஆகியோர் கொட்டும் மழையில் மகா தீபத்தை ஏற்றி வைத்தனர்.இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தலைமை எழுத்தர் லட்சுமணன், விழா குழுவினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
Leave a Reply