தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ,கருப்பாநதிப்அணை திறக்கப்பட்டது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் தற்போது 67 கன அடி நீர் உள்ளது நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்களுக்கு 1434 பசலி பிசான ருவ சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 31-12-2024 முதல் 31-3-2025 வரை 91 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட்டது.

கருப்பாநதி அணை திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், உதவி பொறியாளர் சரவணகுமார், மற்றும் கருப்பாநதி நீர் பகிர்மான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோன்று அடவிநயினார் அணையில் நாள் ஒன்றுக்கு
100 கன அடி தண்ணீரை உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் திறந்தனர்.
Leave a Reply