பொங்கல் முடிந்து இன்று பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி சென்னைக்கு பேருந்தில் வருவோர் கவனத்திற்கு. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். ஒரு சில ஆம்னி பேருந்துகளும் பை-பாஸ் வழியாக செல்லும்.
இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர், கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். (நம்ம ஊர் செய்திகளுக்கு www.ilovekadayanallur.in என்ற நம்ம இணையதளத்தை பார்க்கவும்) அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது. எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் (அல்லது) காட்டாங்குளத்தூரில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி மற்றும் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்கள் மட்டுமே ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
காட்டாங்குளத்தூரில் இருந்து காலையில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும். சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும்.
அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..
குறிப்பு : காலை 4 மணி முதல் சிறப்பு மின்சார ரயில்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்..
இதை ஷேர் செய்து அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்..
Leave a Reply