கடையநல்லூர் அருகே நயினாரகரகரத்தில் சுற்றுலா மினி பஸ் விபத்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த 5 தேதி நாகை மாவட்டம் பொறையாரில் இருந்து சுற்றுலா மினி பஸ் 30 பயணிகளுடன் திருவனந்தபுரம் பகுதிக்கு சுற்றுலா சென்றது பஸ்சை காரைக்காலைச் சேர்ந்த சந்திரசேகர் (48)என்பவர் ஒட்டி வந்துள்ளார் நேற்று இரவு சுற்றுலாவை முடித்துவிட்டு தென்காசி வழியாக பொறையாருக்கு திரும்பும் வழியில் கடையநல்லூர் அருகே நயினாரகரம் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் முன்பு காலை 5:30 மணி அளவில் சுற்றுலா பஸ் வந்த பொழுது எதிர்பாராத விதமாக மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் சுற்றுலா மினிபஸ்ஸில் பயணம் செய்த நாகை மாவட்டம் பொறையார் பகுதியைச் சேர்ந்த நூர்ஜஹான்(42), பரிதா பானு(50), செய்யது ரகுமான்(50) செய்யதுஹிஷாம் (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அச்சன்புதூர் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற பயணிகளை பாதுகாப்பாக மீட்டு இடைகால் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் உதவியுடன் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர் பின்னர் சிகிச்சைக்குப் பின்பு அனைவரையும் வேறொரு வேன் மூலம் பொரையாருக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அச்சன்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply