இன்று நல்ல இரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விபத்தில புத்தாண்டு என்ற ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது
விபத்தில்லா புத்தாண்டு
01.01.2025 அன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில், ஆலயங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய ஸ்தலங்களில் பாதுகாப்பு பணி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து பணி, போக்குவரத்து சீரமைத்தல், சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை செய்தல், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அதிகப்படியான காவலர்கள் நியமித்தல் போன்ற பணிகள் தீவிர படுத்தப்பட்டு சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில்,
🟣 இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தல், பந்தயம் விடுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக சத்தம் எழுப்புதல் போன்ற பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
🟢 18 வயது நிரம்பாத நபர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
🔵 பொது இடத்தில் மது அருந்துதல், சாலையில் கேக் வெட்டி கொண்டாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
🟤 பிற தரப்பினர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக வர்ணங்கள் பூசுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் மீரும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த புத்தாண்டை விபத்து இல்லா புத்தாண்டாக கொண்டாடுவோம், அனைவருக்கும் தென்காசி மாவட்ட காவல் துறை சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இவ்வாறு தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply