தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணை அருகே பெரியநாயகம் அய்யனார் கோவில் உள்ளது.

இன்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற நேரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

ஆற்றில் சிக்கித் தவித்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் 100 நபர்களில் 38 நபர்களை கயிறு கட்டி மீட்டனர். இரவு நேரம் ஆனதால் மழை பொழிவதால் மீதி 60 நபர்களும் பத்திரமாக கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அனைத்து உணவு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை காலை மீட்கப்படுவார்கால் என கடையநல்லூர் தாசில்தார் தெரிவித்தார்.
R.v. s. Mani
சூப்பர்