தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் கடையநல்லூர் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தமிழக அரசின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேவையை கடையநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்னும் நபர் தவறாக பயன்படுத்தி கலவரத்தை உருவாக்குவதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடையநல்லூரைச் சேர்ந்த . கிருஷ்ணன் எனும் நபர் கடந்த மாதம் நவம்பர் 25ஆம் • தேதி மற்றும் டிசம்பர் 16ஆம் – தேதிகளில் காளிமுத்து – என்னும் எனது பெயரையும் தொலைபேசி எண்ணையும் தவறாக பயன்படுத்தி போலியாக எனது கையெழுத்திட்டு கடையநல்லூரில் ஒரு
குறிப்பிட்ட மதத்தினரும், குறிப்பிட்ட சமுதாயத்தினரும், வியாபாரம் செய்து வரும் கடைகளில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் அதை அகற்றும்படியும் நான் மனு கொடுத்ததைப் போல் போலியாக கிருஷ்ணன் எனது கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளார்.
கடையநல்லூரில் ஜாதி மதக் கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இவர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தும், இந்த பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாமதமாவதால் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளின் சேவையையில் தவறாக பயன்படுத்தி கலவரத்தை
தூண்டிவிடும் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்து இனிமேல் அரசு சேவைகளை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்றும் மேலும் கிருஷ்ணன் என்னும் இந்த நபர் நான் மட்டும் தனியாக இதைச் செய்யவில்லை என்னுடன் இன்னும் 10 பேர்கள் சேர்ந்து தான் செய்தோம் என்றும் கூறியுள்ளார்.
ஆதலால் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து இவரையும் இவருக்கு பின்னால் இருந்து செயல்படும் மர்ம நபர்களையும் விசாரித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
Leave a Reply