தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பிரபாகர் என்பவர் பணியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி ராஜினாமா செய்து கடிதம் ஒன்றை டி.ஜி.பிக்கு அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து தற்போது தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும், முதல்நிலை காவலர் திரு. பிரபாகரன் என்பவர் பெயரில், கையொப்பமிடாத பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைகாட்சிக்கு காணொளி வாயிலாக பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவிவந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக திரு.M.ரமேஷ், தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு, அவர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைதளங்களில் மேற்படி காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும், மேலும், காவலர் கொடுத்த மனுவில் காவல் உயர் அதிகாரிகள் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து எழுதியுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேற்படி காவலர் திரு. பிரபாகரன் கடந்த 01.03.2023-ம் தேதி முதல் விட்டோடியாகி 04.10.2024ம் தேதி பணிக்கு அறிக்கை செய்துள்ளார். காவலர்கள் வெளிநாடு செல்வது குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் பரப்பினார். மேற்கண்ட இரண்டு செயல்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னனியில் உயர் அதிகாரிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை சித்தரித்து கையொப்பமிடாத மனுவை காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பியதாகவும், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுத்த வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரியவருகிறது. எனினும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
Leave a Reply