கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அதுபோன்று முப்புடாதி அம்மன் கோவில் தினசரி மார்க்கெட் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கே இடையூறாக இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது இதில் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் தில்லைவாசகம் கடையநல்லூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பொன்னுச்சாமி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை மற்றொரு நாளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் இதுபோன்று கடையநல்லூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply