புளியங்குடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தெருவில் முன்னாள் தமிழக டிஜிபி ராஜேந்திரனின் பூர்வீக வீட்டில் உறவினரான அமிர்தராஜ் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார் இவர்களின் மனைவி ராஜேஸ்வரி, மகள் ரேகாவை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான அருகில் உள்ள விஸ்வநாதபேரிக்கு பெற்றோரை பார்க்க சென்று விட்டார் அமிர்தராஜ் வேலை விஷயமாக வெளியில் சென்ற நேரத்தில் வீட்டில் மகன் பூவேந்திர பொன்ராஜ் (14)
மட்டும் வீட்டில் இருந்துள்ளார்
பிற்பகல் 3:00 மணி மணி அளவில் அமிர்தராஜ் வீட்டிற்குள் இரண்டு நபர்கள் பின்வாசல் கதவை திறந்து முகமூடி அணிந்தபடி வந்தனர். அப்பொழுது வீட்டில் இருந்த சிறுவனை துண்டால் கைகளை கட்டிப் போட்டனர்.
அவர்கள் கூச்சல் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து வைத்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் வீட்டு பீரோவின் சாவியை தருமாறு கேட்டு சிறுவனை மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுவன் பீரோ சாவியை கொடுத்தார்.
அதன் பின்னர் சிறுவனின் முகத்தில் தண்ணீரைப் போன்று ஏதோ ஒன்றை தெளித்ததால் சிறுவன் மயங்கிய விழுந்ததாக கூறப்படுகிறது
அதன் பின்னர் வீட்டில் உள்ள இரண்டு பீரோக்களையும் திறந்து ஒரு பீரோவில் இருந்த ரூபாய் 33,500 மற்றொரு பெயரில் இருந்த 18,000 மற்றும் பட்டு சேலை மொத்தம் 53 ஆயிரத்து 500 ரூபாயை ஆகியவற்றை
கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர்
அதர் பின்னர் வீட்டுக்கு வந்த தாய்ராஜேஸ்வரி மகன் கட்டிப்போட்டு கிடப்பதே கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் கணவருக்கு தகவல் சொன்ன நிலையில் அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்
வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து தகவல் அறிந்ததும் மதியம் 4மணி அளவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா சாலையோரம் தெருக்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் இருப்பினும் கொள்ளையர்களை உடனடியாக கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். அமிர்தராஜ் வீட்டில் சிறுவனைத் தவிர யாரும் இல்லாததை அறிந்து திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரிகிறது. அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. புளியங்குடியில் ஆள் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம் அருகே நடமாட்டம் மிகுந்த பகுதியில் 2 முகமூடிக் கொள்ளையர்கள் வந்து போலீசாருக்கு சவால் விடும் வகையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply