தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு இன்று (டிசம்பர் 28) சனிப்பிரதோஷம் நடைபெற்றது.
நந்தீஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனையும் நடைபெற்றன.

இந்த சனிப்பிரதோச நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

















Leave a Reply