Advertisement

கடையநல்லூரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் அடையாள எண்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோக்களுக்கு பிரத்யோக அடையாள எண் வழங்கப்பட்டது

கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது. ஒவ்வொரு நிறுத்தங்களிலும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. அது தவிர ஆட்டோ நிறுத்தமில்லாத ஆட்டோக்களும் உள்ளது
இந்த ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் எளிதில் ஆட்டோக்களை அடையாளம் காணும் விதத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்தியோக அடையாள எண்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழங்கினார்கள்.

அப்பொழுது ஒவ்வொரு ஆட்டோக்களிலும் உள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா என ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், லைசன்ஸ் அனைத்தும் சரிபாக்கப்பட்டு அவர்களுக்கு ஆட்டோ எண்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகள் ஆட்டோக்களை தவறவிட்ட பொருட்கள் ஆட்டோக்களை பயணம் மேற்கொள்கின்ற பொழுது குற்ற செயல்கள் நடைபெற்றால் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் காண்பதற்கு இந்த எண்கள் வழங்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஆடிவேல் தெரிவித்தார்.

இது சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. முன்னெடுத்த காவல்துறைக்கு நமது ஐ லவ் கடையநல்லூர் மீடியாவின் பாராட்டுக்கள்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *