கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த தனிப்படை தலைமை காவலர் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மறியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது அலி(வயது 40). இவர் கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் தனிப் படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது கிருஷ்ணாபுரத்தில் இருந்து 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், செய்யது அலி மோட்டார் சைக்கிள்’ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செய்யது அலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்லப் பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று காலை அவரின் உடல் தென்காசி மரைக்கார் பள்ளிவாசல் அடக்க ஸ்தலத்தில் டிஎஸ்பி இனியவன் தலைமையில் மூன்று முறை தலா 10 குண்டுகள் வீதம் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் அவரை உடல் அடக்கம் செய்யப்பட்டது முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் ஆகியோர் தலைமைக் காவலர் செய்யது அலி உடலுக்கு மரியாதை செலுத்தினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.















Leave a Reply