தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: மாவட்ட பாஜக தலைவர் அறிமுக விழா தென்காசி இசக்கி மகாலில் திங்கள்கிழமை (பிப்.3) காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெறுகிறது. பாஜக பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர். சரத்குமார், ஆறுமுகனேரி அய்யாவழி சிவசந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். 2026 பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குவோம். வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதைக் கண்டித்து விரைவில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசின் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், பிரத்யேக பயணத் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்
Leave a Reply