தென்காசி மாவட்டம் சிந்தாமணி செண்பகவள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவருக்கு செல்வக்குமார், கார்த்திகேயன் என்ற 2 மகன்களும், ராஜேஸ்வரி என்ற மகளும் உண்டு. கார்த்திகேயன் அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று (ஜனவரி 4) காலை கார்த்திகேயன் பள்ளிக்கு சென்று விட்டு மதியம் 12 மணிக்கு சாப்பிட வீட்டுக்கு வந்து இருக்கிறான். மாடியில் சென்று ரூமில் இருந்தவன் வெகு நேரம் வெளியில் வரவில்லை. அதனை தொடர்ந்து அவனது அம்மா, மற்றும் அக்கா ஆகியோர் சென்று பார்த்த போது கழுத்தில் ஷால் நெரித்தபடி கொடியில் சாய்ந்து கிடந்தான்.
உடனே அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவனை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் உத்தரவின்பேரில் எஸ்ஐ மாடசாமி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அவனது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெற்றோர்களையும் உறவினர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
Leave a Reply