தென்காசி மாவட்டம், தென்காசி நகரப்பகுதி அருகே உள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வழக்கறிஞரான இவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் இவரது வீட்டிலிருந்த அவரது மனைவி ஜூலி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தென்காசி மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் பிரதீப் குமார் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர்கள் ஜெயரத்தினகுமார், ஜெயப்பிரகாஷ் பாபு, தீயணைப்பு வீரர்கள் மாதவன், சிவசண்முகராஜ், முகமது ஹனிபா, சுந்தர் ஆகியோர் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
Leave a Reply