கடையநல்லூர் அருகே கொலை வழக்கில் துரித மாக செயல்பட்டு குற்ற வாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ். பி. அரவிந்த் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கடையநல்லூர் அடுத்த போகநல்லூர் அகதிகள் முகாம்க்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் உடல் கிடப்பதாககிடைத்த தகவலின் அடிப்படையில் தென் காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், புளியங்குடி டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆலோசனையின் படி கடையநல்லூர் இன்ஸ் பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை மேற்கொண்டனர்.
விசார்ணையில் தென்னந்தோப்பில் தீ வைத்து எரிக்கப்பட்டவர் போகநல்லூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவ ராஜ் (54) என்பதும், சிவ ராஜூக்கும், அவரது மகன் கவுரிராஜூக்கும் (35) இடையே நடந்த குடும்ப பிரச்னையில் தென்னந்தோப்பில் வைத்து மது பாட்டி லால் குத்தி சிவராஜை கொலை செய்து விட்டு அடையாளம் தெரி யாமல் இருப்பதற்காக தென்னை மட்டை களை போட்டு பெட் ரோல் ஊற்றி எரித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கொலை சம்பவம் நடந்த பகுதியில் எந்தவிதமான தடயங்களும் இல்லாத நிலையிலும், துரிதமாக செயல்பட்டு குற்றவா ளியை 12 மணி நேரத்தில் கைது செய்த கடையநல் லூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆடிவேல், தலைமை காவலர்கள் முத்துராஜ், கனிராஜ், சங்கர், செந்தில்குமார் ஆகியோரை தென்காசி மாவட்ட எஸ்.பி.அர விந்த் பாராட்டி சான் றிதழ் வழங்கினார்.
Leave a Reply