தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். இக்கோவிலில் தற்சமயம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜன.4) தென்காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்வதற்குப் போல் வந்த கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்த ஆனந்தபாலன் என்பவன், பெட்ரோலை கோவில் வாசலில் ஊற்றி தீயை வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றான். அவனை கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கோயில் முன்ப எரிந்த தீயை கோவில் ஊழியர்கள் அணைத்தனர்.
இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகழ்பெற்றதும், முக்கிய இடத்தில் அமைந்துள்ள கோவில் முன்பு நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply