Advertisement

திருமலைக்கோயில் மற்றும் கருப்பாநதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் கடையநல்லூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

பண்பொழி அருள்மிகு திருமலைகுமாரசாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த
சுற்றுலாத்துறை அமைச்சர்
ராஜேந்திரன் தொடர்ந்து மலை பாதை,கிரிவலப் பாதை மலைப்பாதை ,பூங்கா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அடவியினார் அணைப்பகுதி, கருப்பாநதி அணைப்பகுதி உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டார். கருப்பாநதி அணையை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது;

கருப்பாநதி அணைப்பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும். அதுபோல் அடவிநயினார் அணை, குண்டாறு அணை பகுதியில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்படும் என்றார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி பொறியாளர் சரவணன் உதவி பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *