கடையநல்லூரில் லாரி மோதி பைக்கில் சென்ற ஜவுளி வியாபாரி பலி
கடையநல்லூர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஜவுரி வியாபாரி உயிர் இழந்தார் .
கடையநல்லூர் பேட்டை புதுமனை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது 75.
இவர் கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் பைக்கில் சந்தை தெருவில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு பைக்கில் வந்து மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது அதே திசையில் பின்னாடி வந்த கனரக வாகனத்தில் மோதி உயிரிழந்தார்.
இதில் கனரக வாகனத்தில் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட. சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இவருக்கு மனைவி இரண்டு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது
சமீப காலமாக மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை கடையநல்லூர் வழியாக ஏராளமான கனிம வள லாரிகள் சென்று கொண்டிருக்கிறது பகல் நேரங்களிலும் பள்ளி விடும் நேரத்திலும் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என தடை இருந்தும் தடையை மீறி தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்















Leave a Reply