அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து , திமுக அரசை கண்டித்து கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உட்பட 412 அதிமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் குற்றத்தை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றத்தை கண்டித்தும் யார் அந்த சார் என கோஷமிட்டவாறும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பிய 14 பெண்கள் உட்பட 412 அதிமுகவினரை புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் அதன் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Leave a Reply