Advertisement

செங்கோட்டை அருகே பைக் மீது பஸ் மோதல்; சிறுவன் பரிதாப பலி தாத்தா கண்முன்னே சோகம்

செங்கோட்டை மேலூர் பாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் இவருடைய மகன் நவேத கவுசிக் வயது 7 தனியார் பள்ளிக்கூடததில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலையில் நிவேதகவுசிக்கை பள்ளிக்கூடத்தில் இருந்து தாத்தா வேல் சாமி மின்சார மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.

கணக்குப்பிள்ளை வலசை சந்திப்புபகுதியில் சென்றபோது, செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் சாலையில் விழுந்த சிறுவன் நவேத கவுசிக் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் தலை தசுங்கி பரிதாபமாக இறந்தார். தாத்தா வேஸ்சாமி காயத்துடன் உயிர்தப்பினார் தனது பேரன் இறந்ததைப் பார்த்து கதறி அழுதார்.

விபத்து குறித்து தகவல் அறித்ததா இலத்தூர போலி சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் காதர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This News