Advertisement

கடையநல்லூரில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட அவைத் தலைவர் சங்கரலிங்கம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சரவணன், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நெடுவெயில் குமார், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுடலைமுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் சுப்புராஜ், செயற்குழு உறுப்பினர் தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் தொகுப்பில் ரூபாய் ஆயிரம் வழங்க கோரியும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரி பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த கோரி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளிலிருந்து நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Share This News