கடையநல்லூர் நகை கடையில் போலி தங்க நகையை வைத்துவிட்டு 32 கிராம் ஒரிஜினல் தங்கச் செயினை திருடி விட்டுச் சென்ற மூதாட்டி.போலியை வைத்து ஒரிஜினலை தூக்கிக்கொண்டு ஓட்டம் – கடையநல்லூரில் பரபரப்பு
தங்கச் செயினை சோதனை செய்யும் பொழுது கவரிங் செயின்னாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை நகைக்கடை பஜாரில் நகைக் கடை ஒன்றில் 70 வயது மதிப்புள்ள மூதாட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த போலி கவரிங் தங்க செயினை எடுத்து ஒரிஜினல் தங்கம் வைத்திருந்த பாலித்தீன் பேப்பர் கவரில் வைத்து விட்டு கடைக்காரர் காண்பித்த
ஒரிஜினல் 32 கிராம் தங்கச் செயினை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்து விட்டார்.
பின்னர் 32 கிராம் தங்க நகைக்கு என்னிடத்தில் போதுமான மூன்று லட்சம் ரூபாய் பணம் தற்போது இல்லை வீட்டிற்குச் சென்று பணத்தை எடுத்து வருகிறேன் என கடையின் உரிமையாளரிடம் கூறிவிட்டு மூதாட்டி சென்று விட்டார்.
அதன் பின்னர் கடையின் உரிமையாளர் தங்கச் செயினை எடை போட்டு பார்த்த பொழுது எடை குறைந்து இருந்ததாலும் அந்த செயின் போலி கவரிங் தங்கம் என தெரிந்ததை தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளதை ஆராய்ந்த பார்த்தபொழுது அதில் மூதாட்டி தான் கொண்டு வந்த போலி கவரிங் நகையை வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகையை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து கடையின் உரிமையாளர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து மூதாட்டியை வலை வீசி தேடி வருகின்றனர்
கடையநல்லூரில் 32 கிராம் நகையை நூதனமாக திருடிய மூதாட்டி

Leave a Reply