தகுதிகள் இருந்தும், கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதாக கடையநல்லூர் எம். எல்.ஏ., கிருஷ்ணமுரளி தெரிவித்துள்ளார்.
கடையநல்லுார் எம். எல்.ஏ., கிருஷ்ணமுரளி கூறியதாவது:
கடையநல்லூர் நக ராட்சி முதல்நிலை நக ராட்சியாக செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்டதாக மட்டுமின்றி, அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சியாகவும் விளங்கி வருகிறது. வருமானத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள முதல்நிலை நகராட்சிகளில் முதன்மை பெற்றுள்ளது.
இதனிடையில் இந் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த சட்டசபை மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. அனைத்து தகுதிகளும் இருந்தும், கடையநல்லுார் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழக அரசு புதிய நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துக்களை தோற்றுவித்துள்ளது. இதன்படி அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து டவுன் பஞ்.,களாகவும், நகராட்சிகளாகவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கடை யநல்லூரை பொறுத்த வரை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதிகளும் இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply