கடையநல்லூர் நகர் முழுவதும் நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்
நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.

இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர் திடல் முழுவதும் நிறைந்ததால் மதீனா நகர் செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலை, பெரிய தெரு, புது தெரு ,ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தொழுகைக்காக நின்றனர்.

அதனைத் தொடர்ந்து சரியாக 6:30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் எம் ஐ எஸ் சி தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார் இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இந்த பெருநாள் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் ஆடிவேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
Leave a Reply