Advertisement

நம்ம ஊரு இணையதளம் www.ilovekadayanallur.in – இன்று முதல் ஆரம்பம்

அனைவருக்கும் வணக்கம் இன்று முதல் நமது “ஐ லவ் கடையநல்லூரின்” அதிகாரப்பூர்வ இணையதளம் (www.ilovekadayanallur.in) தொடங்கப்பட்டுள்ளது.

ஏன்.. எதற்கு..:

சமூக வலைதளத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக நமது கடையநல்லூரில் நம்பர் ஒன் முகநூல் பக்கமாக செயல்பட்டு வரும் நமது “ஐ லவ் கடையநல்லூர்” இன்று தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தை தொடங்கியுள்ளது.செய்திகளை சுருக்கமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டாலும் தற்பொழுது இணையதளம் மூலமாக மிகவும் தெளிவாக விவரமாக வெளியிடும் பொருட்டு அதிகாரப்பூர்வமாக நமது இணையதளத்தை இன்று தொடங்கி உள்ளோம்

ஆதரவை வேண்டுகிறோம்:

நமது சமூக வலைதள பக்கங்களுக்கு கொடுத்த அதே ஆதரவை இணையதளங்களுக்கும் கொடுக்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நமது இணையதளத்தில் கடையநல்லூர் செய்திகள் மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தின் முக்கிய செய்திகள் அனைத்தும் இடம்பெறும் பொருட்டு இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான சிறப்பு பகுதி:

நமது சமூக வலைதள பக்கங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிக அளவில் பார்வையிடுகின்றனர் அவர்களுக்கென்று இனி சமையல் பற்றிய தனி பகுதியும் இடம்பெறும்.

உங்கள் இடம்:

நமது கடையநல்லூரைச் சார்ந்தவர்களின் படைப்புகளும் நமது இணையதளத்தில் இடம்பெறும் பொருட்டு உங்கள் இடம் என்ற பகுதி இடம்பெற உள்ளது அதில் நமது உரைச் சார்ந்தவர்கள் கவிதை, கட்டுரை, ஓவியம் முதலிய படைப்புகள் எதுவானாலும் நமக்கு அனுப்பினால் அதை இந்த பகுதியில் வெளியிடும் பொருட்டு இந்த பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.அனைவரும் நமது இணையதளத்திற்கு ஆதரவை தரும்படி வேண்டி விரும்புகின்றோம். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நமது இணையதளத்தில் முகவரியை அனுப்பி அவர்களுக்கும் நமது இணையதளம் தொடங்கியதை தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்,
ஐ லவ் கடையநல்லூர் & குழு

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *